மசோதாக்களை காரணமின்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார் – சபாநாயகர் அப்பாவு

புதுடெல்லி,

டெல்லியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையிலான காமன்வெல்த் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இந்திய பிராந்திய கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு பேசியதாவது;

"சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களை காரணம் இன்றி கவர்னர் நிறுத்தி வைக்கிறார். மக்களவை, மாநிலங்களவை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஓரிரு மணி நேரத்தில் ஒப்புதல் வழங்குகிறார். சட்டப்பேரவையில் நிறைவேறும் மசோதாக்கள் பல ஆண்டுகளாக கவர்னர் அலுவலகத்தில் முடங்கி கிடக்கிறது. மசோதாக்கள் முடங்குவதால் மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போகிறது.

பெரும்பான்மை உறுப்பினர்களால் நிறைவேற்றப்படும் சட்ட முன்வடிவுகளை செயல்படுத்த முடியவில்லை. பேரவையை அவமதிப்பது அந்த சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்த மக்களை அவமதிப்பதாகும்." என அப்பாவு கூறியுள்ளார்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!