மஞ்சக்காட்டு மைனாவாக மாறிய பிரியங்கா சோப்ரா! – வைரல் வீடியோ

Anant -Radhika Wedding : அம்பானி வீட்டு கல்யாணம் : கலக்கல் நடனமாடிய பிரியங்கா சோப்ராவின் வைரல் வீடியோ

மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் அனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவிற்காக கணவர் நிக் ஜோனஸ் உடன் வந்திருந்த நடிகை பிரியங்கா சோப்ரா பாரத் நிகழ்ச்சியில் நடனமாடினார். அப்போது கத்ரீனா கைஃப் நடித்த பிரபல பாடலான சிக்னி சமேலி பாடலுக்கு பிரியங்காவும் இஷா அம்பானியும் நடனமாடினர். ஆகாஷ் அம்பானி இந்த நடனத்துடன் இணைந்தபோது, நிக் ஜோனஸ் கைதட்டி ரசித்தார்.

விளம்பரம்

அதேபோல், பிரியங்கா சோப்ரா தனது முஜ்சே ஷாதி கரோகிக்கு நடனமாடி மகிழ்ந்தார். அதே நேரத்தில் ரன்வீர் சிங் மேடையில் ஏறி நடனமாடி உற்சாகத்தை கூட்டிய நிலையில், பிரியங்கா உடன் இணைந்து நிக் ஜோனஸ் நடனமாடினார்.

The og Rani dancing on her own og banger song#PriyankaChoprapic.twitter.com/dMnQx67crl

— Sitara (@SitaronKeJahaan) July 12, 2024

விளம்பரம்

அந்த நேரத்தில் பிரியங்கா சோப்ரா, கவர்ச்சிகரமான மஞ்சள் நிற லெஹெங்கா உடையில் நடனமாடிய காட்சிகளைப் பார்த்து, பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:
உற்சாக நடனமாடிய அனந்த் – ராதிகா… கண் இமைக்காமல் பார்த்து ரசித்த முகேஷ் அம்பானி!

இந்த திருமண விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் திரைப்பட நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். இதில், அனந்த் மற்றும் ராதிகாவின் உறுதியேற்பு வீடியோவுடன் மண்டபத்தில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
ANANT AMBANI RADHIKA MERCHANT WEDDING CELEBRATIONS
,
mukesh ambani
,
Nita Ambani
,
Priyanka Chopra

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு