மணிப்பூரில் அமித் ஷா உருவப் பொம்மை எரிப்பு!

மணிப்பூரில் பெண்கள் உள்பட நூற்றுக்கணக்கானோர் ராஜ்பவனை நோக்கிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் டிஜிபி மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை நீக்குவதற்கான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. மாணவர்களும் பெண்களும் கலந்து கொள்ளும் இந்த போராட்டத்தில் ராஜ்பவனை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

இந்த போராட்டத்தின்போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மையை, மணிப்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் எரித்தனர். இதனைத் தொடர்ந்து, க்வைரம்பந்த் சந்தையில் முகாமிட்டுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள், பி.டி. சாலையில் உள்ள ராஜ் பவனை நோக்கி அணிவகுத்துச் செல்ல முயன்றபோது, பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சீக்கியர்களைப் பற்றி ஆபத்தான கருத்துகளை உருவாக்கும் ராகுல்: பாஜக

அப்போது, பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலால் கண்ணீர் புகைக்குண்டுகளும் வீசப்பட்டன.

இதனையடுத்து, இம்பால் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும், மாணவர் போராட்டங்களைக் கருத்தில் கொண்டு தௌபாலில் பி.என்.எஸ்.எஸ் பிரிவின்கீழ் தடை உத்தரவுகளையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்