மணிப்பூரில் இன்றைய நிலைமை என்ன? – காவல் துறை தகவல்

மணிப்பூரில் பதட்டம் இருந்தாலும் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த மே மாதம் மெய்தி – குக்கி இன மக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பின்னர் நிலைமை சீராகி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ட்ரோன், வெடிமருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் மூலமாக ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

இதனைக் கண்டித்து அங்குள்ள பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத டிஜிபி, மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மணிப்பூரில் செப். 15 வரை இணைய சேவை துண்டிப்பு!

ஆளுநர் மாளிகையை நோக்கி நேற்று(செப்.10) நடைபெற்ற பேரணியில் பாதுகாப்புப் படையினர் மீது மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர்களைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர், தடியடி நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் 'மணிப்பூரில் இன்று நிலைமை பதட்டமாக உள்ளது, ஆனால் கட்டுக்குள் இருக்கிறது' என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் வன்முறை: 40 மாணவர்கள் காயம்!

முன்னதாக, மணிப்பூரில் இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தௌபால் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க காவல்துறை, பாதுகாப்புப் படையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, மாணவ பிரதிநிதிகள் ஆளுநர் லட்சுமண் ஆச்சார்யாவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஆளுநரும் உறுதியளித்துள்ளார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!