மணிப்பூரில் தொடர் வன்முறை: பாதுகாப்பு அதிகரிப்பு

மணிப்பூரில் அண்மையில் ஏற்பட்ட வன்முறையில் பலர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

"ஞாயிற்றுக்கிழமை இதுவரை புதிய வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. பாதுகாப்புப் படையினருடன் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள் ஒருங்கிணைந்து தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இம்பால் பள்ளத்தாக்கின் விளிம்புப் பகுதிகளில் ட்ரோன்களை தடுக்க ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை அசாம் ரைபிள்ஸ் நிலைநிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதனிடையே மொராங்கில் நடந்த ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராக்கெட் லாஞ்சர் மியான்மரில் வாங்கப்பட்டதா? வங்கதேசத்தில் வாங்கப்பட்டதா? என அவர்கள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தவெகவுக்கு சட்டப்பூர்வ அனுமதி: விஜய் தகவல்

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. மைதேயி சமூகத்தினா் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினா் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கின்றனா். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும்.

மாநிலத்தில் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் மைதேயி சமூகத்தினரும், மலை மாவட்டங்களில் பழங்குடியினரும் அதிகம் வசிக்கின்றனா். இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபடுவதால் உயிா்ச் சேதம் தொடா்கதையாகி வருகிறது. இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். ஆயிரக்கணக்கானோா் வீடிழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், ஜிரிபாம் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டுக்குள் சனிக்கிழமை புகுந்த தீவிரவாதிகள், அங்கிருந்த ஒருவரை சுட்டுக் கொன்றனா். இத்தீவிரவாதிகள் மலைப் பகுதியில் இருந்து வந்தவா்களாவா். இக்கொலை சம்பவத்தைத் தொடா்ந்து, இரு சமூகத்தினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது. இதில் 3 தீவிரவாதிகள் உள்பட ஆயுதம் தாங்கிய 5 போ் உயிரிழந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

தவெக மாநாட்டுக்கு அனுமதி!

இதனிடையே மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் தொடா்பாக இம்பாலில் உள்ள தனது இல்லத்தில் மாநில அமைச்சா்கள் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்களுடன் முதல்வா் பிரேன் சிங் சனிக்கிழமை மாலையில் அவசர ஆலோசனை நடத்தினாா். அண்மைக் காலமாக மலை மாவட்டங்களைச் சோ்ந்த தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், இதைத் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

முன்னதாக பிஷ்ணுபூா் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரு இடங்களில் ராக்கெட் குண்டுகளை வீசி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். மறைந்த முன்னாள் முதல்வா் ஒருவரின் வீட்டை குறிவைத்து குண்டு வீசப்பட்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மலை மாவட்டமான சுராசந்த்பூரில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், அங்குள்ள கிராமங்களில் பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். அப்போது, தீவிரவாதிகளின் 3 பதுங்குமிடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், ராணுவ ஹெலிகாப்டா் மூலம் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிழக்கு இம்பால் மாவட்டத்தில் அண்மையில் தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினா். இதில் இருவா் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா். இந்தச் சூழலில், பிஷ்ணுபூா், கிழக்கு இம்பால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இரவில் பல ட்ரோன்கள் பறந்ததால் மக்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. எதிா் தரப்பினா் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் ட்ரோன்களை பயன்படுத்துவது மணிப்பூரில் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!