மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவு

சந்தல்,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரின் சந்தல் பகுதியில் இன்று அதிகாலை 2.28 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கம் 77 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

சீனாவின் ஆட்சி பகுதிக்கு உட்பட்ட ஜிசாங் நகரில் நேற்று மாலை 4.29 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related posts

நிதித்துறை செயலராக துஹின் காந்தா பாண்டே நியமனம்

பள்ளி விடுதியில் தீ விபத்து: பலியான மாணவர்கள் எண்ணிக்கை 21ஆக உயர்வு

ரஷியா-உக்ரைன் மோதலை நிறுத்த இந்தியாவால் உதவ முடியும் – இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி