மணிப்பூர் அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீசி தாக்குதல்!

உக்ருல் மாவட்டத்தில் உள்ள மணிப்பூர் அமைச்சர் காஷிம் வசும் வீட்டின் மீது கையெறி குண்டு வீசி அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வெடிகுண்டு வெடித்த சமயத்தில் அமைச்சர் உள்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குண்டு வெடித்ததில் அமைச்சரின் வீட்டின் சுவர்கள் மற்றும் சில பகுதிகள் சேதமடைந்தன. தாக்குதலுக்குப் பிறகு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதிகள் இந்த தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படுகிறது.

தங்கம் – வெள்ளி விலை நிலவரம்!

விசாரணைக்காக சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக அதிகாரி கூறினார். இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. வசும் மாநிலத்தில் ஆளும் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நாகா மக்கள் முன்னணியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இதற்கிடையில், தாங்குல் நாகா பழங்குடியினரின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன், குற்றவாளிகளைக் கைது செய்யுமாறு காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.

அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்தால்.. அடுத்த முதல்வர் யார்?

மணிப்பூரில் ஓராண்டாக நிலவும் மோதல்..

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும். இந்த மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்