மணிப்பூர் கலவர இடத்திற்கு மோடி செல்ல வேண்டும்.. ராகுல் வலியுறுத்தல்!

மணிப்பூர் கலவர இடத்திற்கு மோடி செல்ல வேண்டும் – ராகுல்காந்தி வலியுறுத்தல்!

ராகுல் காந்தி

பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் குகி – மெய்தி இனக்குழுக்கள் இடையிலான மோதல் வன்முறையாக வெடித்து கலவரம் மூண்டது. இதனைத் தொடர்ந்து, அவ்வப்போது மோதல்கள் தொடர்ந்து வருகின்றன. இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மணிப்பூர் மாநிலம் தேபாப்ரடாவில் உள்ள ஜிரிபாமில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை, ராகுல் காந்தி நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

விளம்பரம்ALSO READ | கள்ளக்குறிச்சியில் அடுத்த அதிர்ச்சி… 7 பேருக்கு எலிக்காய்ச்சல்.. பொதுமக்கள் பீதி!

தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் அனுசுயா-வை சந்தித்த ராகுல் காந்தி, அவரிடம் நிலைமையை விவரித்தார். அதன்பின்னர் இம்பாலில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மணிப்பூர் மக்களின் வலியை பிரதமர் மோடி புரிந்துகொள்ள வேண்டும் என்றார். முன்னதாக அசாம் சென்ற ராகுல் காந்தி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சில்சாரில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Manipur
,
Prime Minister Narendra Modi
,
Rahul Gandhi

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்