மணிப்பூர் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல்

மணிப்பூர் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் – ஓட்டுநர் மீது பாய்ந்த தோட்டா

மணிப்பூர்

மணிப்பூரில் பாஜக கட்சி ஆட்சி செய்து வருகிறது. அங்கு, பெரும்பான்மையாக வசிக்கும் மெய்தி இன மக்களுக்கும், குக்கி பழங்குடியின மக்களுக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம் வெடித்தது. அதில் சுமார் 200 பேர் பலியாகினர். பல மாதங்களாக வன்முறை நீடித்தது. லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். சிறிது காலம் வன்முறை ஓய்ந்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக அங்கு மீண்டும் வன்முறை தலைதூக்கி உள்ளது.

விளம்பரம்

நேற்று முன்தினம் ஜிரிபாம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 புறக்காவல் நிலையங்கள், வனச்சரக அலுவலகம் ஆகியவை தீ வைத்து எரிக்கப்பட்டன. 70 வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று நேரில் பார்வையிடுவதாக இருந்தது. ஆனால் அவர் டெல்லியில் இருந்து திரும்பி வரவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும் முதலமைச்சர் என்.பிரேன்சிங்கின் பயணத்தையொட்டி, அவரது சில பாதுகாப்பு வாகனங்கள் முன்கூட்டியே நேற்று அங்கு புறப்பட்டு சென்றன. வழியில் கங்க்போக்பி மாவட்டம் கோட்லன் கிராமத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென அந்த வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிளால் சரமாரியாக சுட்டனர்.

விளம்பரம்

இதையும் படிங்க:
சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவசர கதியில் உத்தரவு.. நீதிபதி கருத்து

இதில் ஒரு வாகனத்தின் ஓட்டுநர் வலது தோள்பட்டையில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். 36 கி.மீ. துரத்தில் உள்ள தலைநகர் இம்பாலில் இருந்து பாதுகாப்பு படையினர் கூடுதலாக வரவழைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Manipur

Related posts

பெங்களூருவில் அதிர்ச்சி: இளம்பெண் உடல் 30 துண்டுகளாக பிரிட்ஜில் இருந்த கொடூரம்

“ஏழுமலையானே என்னை மன்னித்துவிடு…” – பவன் கல்யாண் பதிவு

காவல் நிலையங்களில் கூட பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: நவீன் பட்நாயக்