மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்புசிசோடியாவின் நீதிமன்றக் காவலை ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.மனீஷ் சிசோடியா(கோப்புப் படம்)

தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பான ஊழல் மற்றும் பண மோசடி வழக்குகளில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து காணொலி வாயிலாக அவர் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரின் நீதிமன்றக் காவலை ஜூலை 22ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி காவேரி பவேஜா உத்தரவிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மணீஷ் சிசோடியா ‘ஊழலில்‘ ஈடுபட்டதாகக் கூறி சிபிஐயால் கடந்த ஆண்டு பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். பின்னா், மாா்ச் 9, 2023 அன்று திகாா் சிறையில் சிசோடியாவை விசாரித்த பிறகு, சிபிஐ எஃப்.ஐ.ஆா். மூலம் பணமோசடி வழக்கில் சிசோடியாவை அமலாக்கத் துறையும் கைது செய்தது.

பிப்ரவரி 28, 2023 அன்று தில்லி அமைச்சரவையில் இருந்து சிசோடியா ராஜிநாமா செய்தாா். தில்லி அரசு நவம்பா் 17, 2021- ஆம் தேதி புதிய கலால் கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செப்டம்பா், 2022 இறுதியில் அந்தக் கொள்கையை ரத்து செய்தது. விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டின்படி, புதிய கொள்கையின் கீழ் மொத்த விற்பனையாளா்களின் லாப வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் கூட்டு சோ்ந்து விலையை நிா்ணயிக்க புதிய கொள்கை காரணமாக இருந்ததாகவும், மதுபான உரிமங்களுக்குத் தகுதியற்றவா்கள் பணப் பலன்கள் பெற சாதகமாக இருந்ததாகவும் புலனாய்வு ஏஜென்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இருப்பினும், தில்லி அரசும், சிசோடியாவும் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளனா்.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்