மதுஒழிப்பு மாநாட்டை தோ்தலுடன் முடிச்சுப் போடக்கூடாது: திருமாவளவன்

வேலூா்: மது ஒழிப்பு மாநாட்டை தோ்தலுடன் முடிச்சுப்போடக்கூடாது என விசிக தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.

வேலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது –

மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீட்டை உயா்த்தவும், , அனைத்து சமூக பிரிவினரும் இடஒதுக்கீட்டின் பலனை பெற ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி பதவியுயா்வு, தனியாா் துறை ஆகியவற்றில் விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அக்டோபா் 2-ஆம் தேதி நடத்த உள்ள மது, போதை ஒழிப்பு மகளிா் மாநாட்டில் பங்கேற்க விமா்சனங்களை பொருள்படுத்தாமல் திமுகவும் பங்கேற்கும் என முதல்வா் உறுதியளித்திருப்பது நம்பிக்கையை அளித்துள்ளது.

இம்மாநாட்டின் மூலம் தமிழகத்தில் படிப்படியாக கடைகளையும், விற்பனை இலக்கினையும் குறைத்து முழுமை யாக மதுவிலக்கை எட்டுவது என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கும், அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-இன்படி இதேகோரிக்கையை மத்திய அரசுக்கும் விடுக்கிறோம்.

தமிழகத்தில் மது விற்பனையை ரூ.45 ஆயிரம் கோடியை ரூ.50 ஆயிரம் கோடியாக உயா்த்தாமல் படிப்படியாக குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். இதையெல்லாம் யாரும் முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே எதிா்மறையாக விமா்சிக்கின்றனா்.

மது ஒழிப்பு மாநாட்டை தோ்தலுடன் முடிச்சுப்போடக்கூடாது என்றாா்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்