மதுபான விருந்து பாஜக நிர்வாகி ஜெகதீஷ்சவுத்ரி கட்சியில் இருந்து நீக்கம்

மதுபான விருந்து – பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி கட்சியில் இருந்து நீக்கம்!

மதுபானம்

கர்நாடகாவில் பாஜக எம்.பி. வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்கள் வழங்கிய விவகாரத்தில் அக்கட்சியின் நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவின் சிக்கபள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த சுதாகர் என்பவர் வெற்றி பெற்றார். இதனை கொண்டாடும் வகையில் நெலமங்களாவில் பொதுமக்களுக்கு பாஜகவினர் மதுபான பாட்டில்களை வழங்கியுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

நெலமங்களாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி என்பவர், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்குவதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு கலால்துறையே அனுமதி அளித்ததாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

விளம்பரம்

இந்தநிலையில், பொதுமக்களுக்கு மதுபான பாட்டில்களை வழங்க ஏற்பாடு செய்த பாஜக நிர்வாகி ஜெகதீஷ் சவுத்ரி பாஜகவில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளார். மதுபான விருந்து நிகழ்ச்சியை நடத்த கலால் துறை அனுமதி வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர்.

பெங்களூரு ரூரல் எஸ்.பி., சி.கே.பாபா கூறுகையில், “கலால் துறை அனுமதி அளித்து, ஏற்பாடுகளை கவனிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில், போலீஸ் துறையின் தவறு இல்லை, அனுமதி வழங்குவது கலால் துறையின் பொறுப்பு.

பாஜக நடத்திய மதுபான விருந்து தொடர்பாக பதிலளித்த கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் , இது பாஜகவின் கலாச்சாரம் . நெலமங்களாவில் நடந்த பொது நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்களுக்கு மதுபானம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்வது வேறு விஷயம், அதற்கு முன் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று கூறினார்.

விளம்பரம்

இதையும் படிங்க:
41 ஆண்டுகளில் 2,000 மடங்கு அதிகரிப்பு.. 1983-ல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

ஒரு பொது நிகழ்ச்சியில் அதன் கட்சியினருக்கு மதுபானம் விநியோகிக்க அதன் எம்.பி.க்கு அனுமதி அளித்தது. “உள்ளூர் பாஜக தலைவர்களை விட , பாஜக பொதுக்கூட்டங்களில் மது விநியோகம் செய்வதன் மூலம் கலாச்சாரத்தை பாஜக எவ்வாறு உயர்த்திப்பிடிக்கிறது என்பதை பாஜகவின் தேசியத் தலைவர்கள் மக்களுக்குச் சொல்வது முக்கியம் ,” என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
BJP
,
Karnataka

Related posts

பெங்களூருவில் பயங்கரம்: முக்கியக் குற்றவாளியைக் கண்டறிந்த காவல்துறை!

நிமிர்ந்தால் ஆயிரம் கலையழகு… மீஷா ஐயர்!

காதல்ஜோடியிடம் பணம் பறிப்பு! காவலர் இடைநீக்கம்!