மதுரையில் தரையிறங்க முடியாமல் வட்டமடிக்கும் 2 விமானங்கள்!

கனமழையால் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 2 விமானங்கள் வட்டமடித்து வருகின்றன.

சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து மதுரை வந்த 2 இண்டிகோ விமானங்கள் வானில் வட்டமடிக்கின்றன. மழையின் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியவில்லை எனத் தகவல் தெரியவந்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருப்பதன் காரணமாகவும், காற்று சுழற்சியின் நகர்வு காரணமாகவும் தமிழகத்தில் இடியுடன், கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரமாக பலத்த மழைப் பெய்து வருகிறது.

இதையும் படிக்க: தீபாவளிக்கு 7,000 சிறப்பு ரயில்கள்!

இதனால், மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தேனி அருகே ஒரு விமானமும், திருமங்கலம் அருகே ஒரு விமானமும் வட்டமடித்து வந்த நிலையில், விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிரக்கப்பட்டது.

கடந்த அக். 11 ஆம் தேதி திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக்கோளாறு காரணமாக வானத்தில் 3 நேரத்திற்கும் மேலாக வட்டமடித்து, எரிபொருள் குறைந்த பிறகு விமானம் தரையிறக்கப்பட்டது.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்