மதுரையில் மழைநீரை வெளியேற்ற 3 நாட்கள் ஆகும்: அமைச்சர் மூர்த்தி

மதுரையில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்கள் ஆகும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

மதுரையில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் இருந்து தண்ணீர் ஆனது கண்மாய்களில் நிரம்பி கால்வாய்கள் மூலம் வைகை ஆற்றிற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மதுரை வைகை ஆற்றில் தொடர்ச்சியாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கண்மாய்களில் இருந்து கால்வாய் மூலம் வைகை ஆற்றங்கரைக்கு திருப்பிவிடப்பட்ட தண்ணீர் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடத்தில் வெளியேறும் தண்ணீரின் அளவு குறித்து தற்போது தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் அருண் தம்புராஜ், மதுரை ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மற்றும் மேயர் ஆகியோருடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் மூர்த்தி, மதுரையில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் தற்போது வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரை அகற்றுவதற்கு தொடர்ச்சியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மதுரையில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் மூன்று நாட்கள் ஆகும்.

குஜராத்: 10 ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தற்போது தனியார் மண்டபங்களில் தங்க வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை பெய்த பலத்த மழையால் பல கண்மாய்கள், வாய்க்கால்களில் நீா் நிரம்பி, வெள்ள நீா் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்தது.

தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். பலத்த மழை காரணமாக, மதுரை மாநகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related posts

Bhopal’s Deaf-Mute Kanishka To Represent India

Bina’s Nirmala Sapre Is Associated With Which Party?

Tome & Plum: Diwali Of Present Bhopal Still Has By-Gone-Day Fragrance