மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை: சு. வெங்கடேசன்

மதுரையில் 15 நிமிடத்தில் 45 மி.மீ மழை பெய்துள்ளதாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்ததாவது:

மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 3.15 வரையிலான 15 நிமிடத்தில் 45 மி.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

காலை 8.30 முதல் மாலை 5.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 98 மி.மீ. மழை பொழிந்துள்ளது. பாதிப்பின் தீவிரத்தைத் தணிக்க போர்க்கால நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மதுரையை திக்குமுக்காட வைத்த மழை: போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி!

மதுரையில் கொட்டித்தீர்த்த மழை

மத்திய கிழக்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த புயல் வலுவடைந்ததன் காரணமாகவும், காற்றுச் சுழற்சி நகா்வு காரணமாகவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இந்த நிலையில், மதுரையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு சில நாள்களாக மழை பெய்து வருகிறது.

மதுரையில் இன்று பகலில் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் பல இடங்களில் சுமாா் ஒரு அடி உயரத்துக்கும் மேலாக மழைநீர்த் தேங்கி நின்றதால், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?