மதுரையை திக்குமுக்காட வைத்த மழை: போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி!

மதுரை: வடகிழக்குப் பருவமழை தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. மதுரையில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஒரு சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக அப்பகுதி மக்கள் திக்குமுக்காடி வருகிறார்கள்.

மதுரையில் இன்று பகலில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த 6 நாள்களாக காலை, மாலை என இரண்டு நேரங்களிலும் அதிகப்படியான கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதிகளில் மாலை வேளைகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கனமழை பெய்வதால் பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க.. கமலா ஹாரிஸ் Vs டிரம்ப்! அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி யாருக்கு?

இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் தல்லாகுளம், தமுக்கம் மைதானம், கோரிப்பாளையம் சிம்மக்கல், அண்ணா பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் உள்ளிட்ட மதுரை மாநகர், புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் நகர்ப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்துள்ளனர்.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?