மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அங்கம் வெட்டிய லீலை!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் ஆவணி முலத்திருவிழாவில் 6 ஆம் நாள் நிகழ்வாக அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா கடந்த 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் விழாவின் 6ஆம் நாள் நிகழ்வான சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான குருத்துரோகம் செய்த சீடனை குரு உருவில் வந்து சீடனின் அங்கங்களை வெட்டி தண்டித்த பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது

குலோத்துங்க பாண்டியன் காலத்தில் பாணன் என்ற வயதான வாள் வித்தை ஆசிரியர் வாழ்ந்து வந்தார். அவருடைய சிஷ்யர்களில் சித்தன் என்பவன் மிகவும் தீய குணம் கொண்டவன். அவன் வாள் வித்தை பயிற்சி முடித்து விட்டு, புதிதாக வாள்வித்தை பயிற்சிப் பள்ளியை ஆரம்பித்தான். அப்போது அவன் ஆசிரியரின் மனைவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தான்.

இதுகுறித்து ஆசிரியரின் மனைவி இறைவன் சோமசுந்தரரிடம் முறையிட்டார். எனவே இறைவன் ஆசிரியர் வேடத்தில் சென்று, சித்தனை வாள் போருக்கு அழைத்தார். போரில் ஆசிரியரின் மனைவியை நினைத்த நெஞ்சையும், பேசிய நாக்கையும், அந்த பெண்ணை தொட்ட கைகளையும், கண்ட கண்களையும் என ஒவ்வொரு அங்கமாக வெட்டினார்.

சிவ பெருமான். இறுதியில் சித்தனின் தலையையும் வெட்டிக் கொன்றார். இறைவனே ஆசிரியர் வடிவில் வந்து நிகழ்த்திய திருவிளையாடலை அறிந்த குலோத்துங்க பாண்டியன், வயதான ஆசிரியர் பாணனுக்கு தக்க மரியாதைகள் செய்து கௌரவித்தார். இந்த திருவிளையாடலை எடுத்துரைக்கும் வகையிலான சிறப்பு அலங்காரமான கையில் வாளுடன் சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி காட்சி அளித்தனர்.

முன்னதாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. ஆவணித் திருவிழாவில் 6ஆம் நாள் நிகழ்வை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!