‘மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து மாநாடு’ – ஜி.கே.வாசன் கண்டனம்

சென்னை ,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க தி.மு.க. , அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது ,

யார் வந்து மதுவை ஒழிக்கக் கூடிய அதிகாரத்தை கையிலே வைத்திருக்கிறார்களோ.. அவர்களையும் வைத்துக் கொண்டு மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது மக்கள் மத்தியில் ஆச்சரியமாகவும், வேடிக்கையாகவும், புதிராகவும் இருக்கிறது. இதற்கெல்லாம் பதில் தேர்தல் நேரத்தில் சரியாக, முறையாக வாக்குச் சீட்டின் மூலம் மக்கள் கொடுப்பார்கள். என தெரிவித்தார் .

Related posts

அர்ச்சகர்களை கருவறையில் அனுமதிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

கடலூர் மாவட்ட பாசனத்திற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

ஒரே நாடு ஒரே தேர்தல்: பாஜகவால் ஒருபோதும் செயல்படுத்த முடியாது – முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்