மதுவை ஒழிக்க மாநில அரசால் முடியாது: அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் மட்டும் மதுவை ஒழிக்க முடியாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

மதுவை ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் அனைத்து மாநிலங்களும் ஒத்துழைக்க வேண்டும், தமிழ்நாட்டில் மட்டும் ஒழிக்க முடியாது. அதை மத்திய அரசுதான் கையில் எடுக்க வேண்டும்.

காந்தி இன்று உயிரோடு இருந்திருந்தால்… ப. சிதம்பரத்தின் கேள்விகள்!

ஆனால், மதுவை ஒழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒத்துழைப்பு வழங்குவார், தமிழகத்தில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதுகூட கிடையாது. மதுவை ஒழிப்பதற்கு இந்தியளவில் சட்டம் கொண்டுவர வேண்டும்.

காந்தி மண்டப வளாகத்தை சுத்தம் செய்த ஆளுநர் மற்றும் கேமராமேன் கண்களுக்கு மட்டும் மதுபாட்டில் தென்பட்டு இருக்கிறது. காந்தி மண்டப வளாகத்தை இரவு நேரங்களில் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

Related posts

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு வசதியாக சறுக்குப்பாதை

ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை