மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான்: அன்புமணி

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜிதான் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாமக சார்பில் நடைபெறும் 36 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

தமிழக முதல்வர் 17 நாள் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து 19 நிறுவனங்களில் மூலம் ரூ. 7600 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். இது ஒரு தோல்வி பயணம், மற்ற மாநில முதல்வர்கள் ஆறு நாள்களில் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்து அந்நிய முதலீடுகளுக்காக ரூ. 40,000 கோடி ரூபாய்க்கு முதலீடு ஈர்க்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி சாதி கட்சி என திருமாவளவன் கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி சமூக நீதிக் கட்சி. எங்கள் தலைவர் தமிழ்நாட்டில் அருந்ததியர் சமுதாயத்திற்கு உள் ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்துள்ளார். பிற்படுத்தப்பட்டோருக்கான 20% சத இடஒதுக்கீடு பெற்று தந்துள்ளோம்.

ஓணம்: பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

திருமாவளவன் மதுவிலக்கு மாநாடு நடத்தினால் ஆதரிக்கிறோம். மது ஒழிப்பு தொடர்பாக நாங்கள் பிஎச்டி படித்துள்ளோம், திருமாவளவன் எல்கேஜிதான் படித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பின்பு தான் மதுவிலக்கு பற்றி திருமாவளவன் பேசுகிறார். நாங்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பே ராமதாஸ் அவர்கள் மதுவிலக்கு குறித்து பேசி வருகிறார்.

ஆட்சியில் பங்கு வேண்டும் என திருமா பேசிய விடியோ பதிவு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி, திருமாவளவன் பதிவு சரியான பதிவு, அதை ஏன் நீக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரவேண்டும் எனக் கட்சி தொடங்கவில்லை. அதை நீக்கியதுதான் சரியில்லை. இதுக்காக ஸ்டாலின் கோவப்படுவார் என்று விடியோ பதிவை நீக்கி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜானி மாஸ்டர்!

பொது சொத்துக்களை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் துரைமுருகன்