மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு: எச்.ராஜா

புதுக்கோட்டை,

புதுக்கோட்டையில் தமிழக பாஜக பொறுப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

காந்தி ஜெயந்தி முன்னிட்டு எப்படியாவது தமிழகத்தில் குறிப்பாக பெண் வாக்காளர்களை கருத்தில் கொண்டு திசை திருப்பும் விதமாகவும் குற்றவாளிகளை காப்பாற்றும் விதமாகவும் ஒரு கட்சி இன்று மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுக அரசு 500 மதுபான கடைகளை மூடுவேன் என்று சொல்லிவிட்டு ஆயிரம் தனியார் கிளப்புக்கு அனுமதி அளித்துள்ளனர்.

இவ்வாறு மதுவை ஊக்குவிக்கும் திமுக அரசின் பிரதிநிதிகள் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள் என்றால் இது யாரை ஏமாற்றும் செயல். இது மது ஒழிப்பு மாநாடா? அல்லது மது உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்கள், மது பிரியர்கள் மாநாடா?.

கள்ளக்குறிச்சியில் 65 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெட்கமே இல்லாமல் இந்த ஆண்டு 1,700 கோடி ரூபாய் மதுக்கடை மூலம் அதிக வருமானம் வந்துள்ளது என்பது திமுக கூறியிருப்பது வெக்கக்கேடான விஷயம். மதுக்கடைகளை திறந்தவர்கள்தான் மதுக்கடைகளை மூட வேண்டும். மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு; மக்களை ஏமாற்றுகிற மாநாடு.

திமுக அரசு பொறுப்பேற்ற பின் அறநிலைத்துறை மூலம் புனரமைப்பு செய்யப்பட்ட கோவில்களை கள ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் நடைபெற்ற கோவில் புனரமைப்பு பணிகளில் பெரும்பாலும் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்