மது விற்பனை குறைந்ததால் ஊழியர்கள் சஸ்பெண்ட்: டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

மது விற்பனை குறைந்ததால் ஊழியர்கள் சஸ்பெண்ட்: டாஸ்மாக் தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

சென்னை: தமிழகம் முழுவதும் குறைவான மது விற்பனை நடந்த டாஸ்மாக் கடைகளில் கடந்த சில நாட்களாக அதிகாரிகள் ஆய்வு செய்து, ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக தொழிற் சங்கத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர் தொழிற்சங்கத்தினர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கடந்த ஆண்டை விட மது விற்பனை குறைவாக நடைபெற்றதாக டாஸ்மாக் கடைகளில் ஆய்வு நடத்தி 46 ஊழியர்கள் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளனர். 86 ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், 46 கண்காணிப்பாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், டாஸ்மாக் கடைகளில் வருவாயை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுக்கின்றனர்’’ என்றனர்.

டாஸ்மாக் ஊழியர்கள் மாநிலசம்மேளனம் பொதுச் செயலாளர்கே.திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை ஊழியர்களை மறைமுகமாக மிரட்டும் போக்காகும். விற்பனையை அதிகரிக்க வேண்டும் என ஊழியர்களை தொடர்ந்து நிர்பந்தம் செய்து வருகின்றனர். இத்தகைய அதிகாரிகள்மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related posts

சமூகவலைதளம் மூலம் பழக்கம்: 16 வயது மாணவியை சீரழித்த 4 பேர் கைது

சித்தராமையா மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல்

நேற்றிரவு… ஹிமான்ஷி குரானா!