மத்தியப் பிரதேசம்: டிரக்கில் இருந்து 1,600 ஐபோன்கள் திருட்டு

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் டிரக்கிலிருந்து 1,600 ஐபோன்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணாவில் இருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த டிரக்கில் இருந்து 1,600 ஐபோன்கள் திருடுபோனதாக புகார் எழுந்துள்ளது.

இதன் மதிப்பு ரூ.12 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், டிரக்குடன் சென்ற பாதுகாவலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து சாகர் மண்டல காவல் ஆய்வாளர் பிரமோத் வர்மா கூறுகையில், "ரூ. 12 கோடி மதிப்பிலான 1,600 ஐபோன்கள் திருடப்பட்டுள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.

பாதுகாவலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. குழுக்கள் அமைக்கப்பட்டு நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். கன்டெய்னர் ஹரியாணாவில் உள்ள குருகிராமில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

பாதுகாவலர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஓட்டுநரை மடக்கியுள்ளார்" என்று அவர் மேலும் தெரிவித்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: இரு நாள்களில் 558 பேர் பலி!

உடல் எடையை அதிகரிக்கும் ராம் சரண்!

தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸி: இங்கிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!