மத்திய அமைச்சரவையில் அண்ணாமலை இடம்பெறவில்லை

“மத்திய அமைச்சராக பதவியேற்கவில்லை… தமிழ்நாட்டில் பணிகளை தொடர உள்ளேன்” – அண்ணாமலை

அண்ணாமலை

மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியுடன் பாஜக கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று இரவு 7.15 மணிக்கு பதவியேற்க உள்ளது. புதிய அமைச்சரவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எல்.முருகன், தமிழிசை சவுந்தரராஜன் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில், மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். நியூஸ் 18-க்கு பேட்டி அளித்த அண்ணாமலை, தமிழ்நாட்டில் பணிகளை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, டெல்லியில் மோடி இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Annamalai

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

ஆன்லைனில் கட்டிட அனுமதியை விரைவாக வழங்க வழிகாட்டுதல்: 30 நாளில் உத்தேச தடையின்மை சான்று

ரூ.158 கோடியில் தொழில்நுட்ப கட்டிடம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்