மத்திய காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் குண்டு வீச்சு: 19 பேர் பலி

மத்திய காஸா பகுதியில் உள்ள பள்ளி மீது இஸ்ரேல் பீரங்கி குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலியானார்கள்.

மத்திய காசா பகுதியின் நுசைரத் அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்தவர்கள் வசிக்கும் பள்ளி மீது இஸ்ரேல் ஞாயிற்றுகிழமை பீரங்கி குண்டு(ஷெல்) வீசித் தாக்குதல் நடத்தியது.

உடனே சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவுகள் விரைந்தன. மீட்புக் குழுவினர் 19 சடலங்களை மீட்டனர்.

கொல்கத்தா மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்… மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட காயமடைந்த 80 பேரையும் மீட்டு மத்திய காஸாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை, வடக்கு காஸாவின் அல்-ஷாதி முகாமின் மேற்கில் இஸ்ரேலிய இராணுவத்தால் ஐந்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் – ஹமாஸ் படையினரிடையே போர் நடைபெற்று வருகிறது.

இதில் இதுவரை 42,227 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது