மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்: பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை

புதுடெல்லி,

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது இஸ்ரேல் – ஈரான் இடையே கடும் சண்டை துவங்கியுள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவு நாடுகள் குரல் கொடுப்பதால், மேற்காசியாவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து, ஒரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் நிலையில், ஹிஸ்புல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரமாக்கியது. இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று பாதுகாப்பு தொடர்பான மந்திரி குழுக்கள் மற்றும் உயரதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ராணுவம், நிதி, வெளியுறவுத்துறைகளின் அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Related posts

Editorial: What Next For Classical Languages?

Editorial: Central Railway Commuters Are Given Short Shrift

The Importance Of Being Sonam Wangchuk