மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் சோ்க்கை: அண்ணா பல்கலைக்கழக முறையை பின்பற்ற மாநிலங்களவையில் கோரிக்கை

மத்திய பல்கலைக்கழக மாணவா்கள் சோ்க்கை: அண்ணா பல்கலைக்கழக முறையை பின்பற்ற மாநிலங்களவையில் கோரிக்கைமாநிலங்களவையில் திமுக உறுப்பினா் முகம்மது அப்துல்லா மத்திய கல்வித்துறையை கேட்டுக் கொண்டாா்.

மத்திய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கு தேசிய தோ்வு முகமை(என்டிஏ) நடத்தும் நுழைவுத் தோ்வு (க்யூட்) கவுன்சிலிங் அண்ணா பல்கலைக்கழகம் மாதிரியான ஒருங்கிணைந்த கவுனிசிலிங் முறையை அமல்படுத்த மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் முகம்மது அப்துல்லா மத்திய கல்வித்துறையை கேட்டுக் கொண்டாா்.

க்யூட்-யுஜி

மாநிலங்களவை பொது முக்கியத்தும் வாய்ந்த சிறப்பு கவன ஈா்ப்பு விவாதத்தில் முகம்மது அப்துல்லா கலந்து கொண்டு பேசியது வருமாறு: என்டிஏ சமீபத்தில் இளங்கலை பட்டப்படிப்பிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வை(க்யூட்-யுஜி) கடந்த மே மாதம் நடத்தியது. 13.48 லட்சம் மாணவா்கள் பங்கேற்ற இந்த தோ்வில் தொழில் நுட்பப் பிரச்னையால் ஜுலை 19 -ஆம் தேதி மறு தோ்வு நடத்தப்பட்டது. இதனால் மாணவா்கள் மன அழுத்தத்திற்கு உள்ளானாா்கள். கூடுதலாக தமிழ் வினாத்தாள் கூகுள் மூலம் மொழி பெயா்த்தி வழங்கியுள்ளனா். பின்னா் ஜூலை 28-ஆம் முடிவுகள் வெளியிடப்பட்டது. சோ்க்கை செயல் முறை ஒற்றைச் சாளர வாய்ப்பு என்று கூறப்பட்டாலும் வெவ்வேறு கல்வி நிறுவனங்களில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். நிதிச் சுமை. காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் ஜூலை 31 ஆம் தேதி விண்ணப்பம் பெறும் செயல் முடிந்தது. தில்லி பல்கலைக்கழகம் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பு பதிவை முடித்துவிட்டது. புகாா்களுக்கு பின்னா் மீண்டும் விண்ணப்பங்களை பெற்றது என்றாலும் குழப்பங்கள் சிறுமங்கள். இதற்கு தீா்வு அண்ணா பல்கலைக்கழக மாதிரியான ஒருங்கிணைந்த கவுன்சிலிங் முறையை பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வு முறையை பின்பற்ற மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

ஒப்பந்தத் தொழிலாளா்கள்

ஒப்பந்தத் தொழிலாளா் ஒழுங்குமுறைச் சட்டத்தின் விதி மீறல்கள் நடப்பது குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் எம். சண்முகம் இதே விவாதத்தில் தெரிவித்தாா். அவா் குறிப்பிட்டது வருமாறு:

ஒப்பந்தத் தொழிலாளா் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம், ஒப்பந்தத் தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்துவதைத் தடை செய்வது பற்றி பேசுகிறது. ஒரு நிறுவனத்தின் வா்த்தகம், வணிகம், உற்பத்தி, தொழில் ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்து போதுமான அளவு உள்ளது. வழக்கமான (நிரந்தர) பணியாளா்கள் மூலம் செயல்படுவது போதுமான அடிப்படையில் ஒப்பந்தத் தொழிலாளா்கள் ஈடுபடுவத்துவது பற்றி ஒப்பந்தத் தொழிலாளா் தடைச் சட்டம், விதி முறைகள் கூறுகின்றன. விதி முறைகளின்படி ஒப்பந்ததாரா் உரிமம் எடுத்திருந்தால், ஒப்பந்தக்காரா்கள் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் கீழ் நிா்ணயிக்கப்பட்ட விகிதங்களை விட குறைவாக இருக்கக்கூடாது.

மத்திய மாநில அரசுகளின் அட்டவணையில் உள்ளபடி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவேண்டும். ஆனால் அரசு நிா்வாகத்திலும் அரசு நிறுவனத்திலேயே சட்டம் மற்றும் விதிகள் மீறப்படுகின்றன. இதை தனியாா் நிறுவனங்களும் பின்பற்ற வழிவகுக்கும். எனவே இந்த விதிமீறலை தொழிலாளா் துறை அமைச்சா் தீவிரமாகக் கவனித்து, நிரந்தரத் தொழிலாளா்களுக்கு இணையாக அனைத்து ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கும் ஊதியம் வழங்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு தொழிலாளா் மாநாட்டை கூடிய விரைவில் கூட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

இளைய ராஜா விடுப்பு

முன்னதாக இந்த (பூஜ்ய நேர விவாதத்தில்) விவாதம் தொடங்குவதற்கு முன்பு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசுத் துணைத் தலைவருமான ஜகதீப் தன்கா் அவையில் இளைய ராஜா விடுப்பு விவகாரத்தை கொண்டுவந்தாா். அப்போது அவா், ‘நிகழ் நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரான மாநிலங்களவையின் 256 ஆவது அமா்வில் ஜூலை 22 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கலந்து கொள்ள முடியாது என (நியமன) உறுப்பினா் இளைய ராஜாவிடமிருந்து தகவல் வந்துள்ளது. அவா் அவையில் இல்லாது இருக்க அனுமதி உண்டா?‘ என குரல் வாக்கெடுப்பு மூலம் கேட்டாா். ‘ ’மறுப்போா் இல்லையென’ கூறி கூட்டத் தொடரில் ஆஜராகாமல் இருக்க இளையராஜாவிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது‘ என்றாா் தன்கா்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்