மன உறுதியைக் குலைக்கும் செயல்! ஹரியாணா முடிவுகள் குறித்து காங்கிரஸ்!

ஹரியாணா தேர்தல் முடிவில், மன உறுதியை குலைக்கும் விளையாட்டு விளையாடப் படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொண்டர்கள் மனம் தளர வேண்டாம் என்று நாம்தான் ஆட்சி அமைக்கப் போகிறோம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஹரியாணா, ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

ஜம்மு – காஷ்மீரில் தொடக்கம் முதல் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. ஆனால், ஹரியாணாவில் தொடக்கத்தில் முன்னிலை பெற்ற காங்கிரஸ் தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றது.

இதையும் படிக்க : ஹரியாணா, ஜம்மு – காஷ்மீரில் யார் முன்னிலை? 12 மணி நிலவரம்!

இதுகுறித்து செய்தியாளருடன் பேசிய ஜெய்ராம் ரமேஷ்,

“தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை, மனமுடையே தேவையில்லை. மன உறுதியைக் குலைக்கும் விளையாட்டு விளையாடப்படுகிறது.

நாம் வெற்றி பெற்று ஹரியாணாவில் ஆட்சி அமைக்கப் போகிறோம், யாரும் சோர்வடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகல் 12.30 மணி நிலவரப்படி, ஹரியாணாவில் பாஜக 48, காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.

Related posts

மனைவிக்காக 25 ஆண்டுகளாக உண்ணா நோன்பிருக்கும் பாஜக எம்.பி.!

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு!

எனக்கு உந்துசக்தி தங்கை துளசிமதிதான்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்