மமதாவுடன் பேச்சுவார்த்தை: மருத்துவர்கள் அளித்திருக்கும் பதில்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மாநில முதல்வர் மமதா பானர்ஜியுடன் அவரது இல்லத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆனால், அதே வேளையில், இரு தரப்பிலும் நடக்கும் பேச்சுவார்த்தைகள் பதிவு செய்ய ஒப்புக்கொண்டால், பேச்சுவார்த்தையில் இணைவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், மேற்கு வங்க முதன்மைச் செயலரிடம் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

ஆர்ஜி கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கொல்கத்தா காவல்துறை அதிகாரியை சிபிஐ கைது செய்திருக்கும் நிலையில், இரு தரப்பிலும் நடைபெறும் கூட்டம் வெளிப்படையாக நடைபெறவேண்டியதன் அவசியத்தை அதிகரித்திருப்பதாக போராடி வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் என்ற வகையில், கூட்டத்தில் பங்கேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம், ஆனால், கூட்டம் நடக்கும் இடம், அதிகாரப்பூர்வ இடமாகவோ அரசு அலுவலகமாகவோ இருக்க வேண்டும் என்று கருதுகிறோம் என மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பிலும் தனித்தனி விடியோ பதிவாளர்களைக் கொண்டு விடியோ பதிவு செய்யவும் அரசு தரப்பில் செய்ய முடியாவிட்டால், நாங்களே விடியோ பதிவு செய்து உங்களுக்கு அளிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.

மலப்புரத்தில் நிபா வைரஸுக்கு 2வது நபர் பலி: தடை உத்தரவு, திரையரங்குகள் மூடல்!

இதனைக் கண்டித்தும், நீதி கேட்டும், மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த மருத்துவர்கள் பல்வேறு நிபந்தனைகளை விதித்த நிலையில், அந்த நிபந்தனைகளை மாநில அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, இன்று ஐந்தாவது முறையாக, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மமதா பானர்ஜி, போராடி வரும் மருத்துவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இன்று மாலை 5 மணிக்கு மேற்கு வங்க முதல்வரின் இல்லத்திற்கு வருமாறு முதல்வர் விடுத்திருந்த அழைப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரு தரப்பிலும் நடைபெறும் பேச்சுவார்த்தையை நேரடி ஒளிபரப்பு செய்ய முடியாது, ஆனால், பேச்சுவார்த்தையில் பேசப்பட்டது குறித்து பதிவு செய்யப்பட்டு இரு தரப்பினரின் ஒப்புதல் பெறப்படும் என்று கூறப்பட்டதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையில் பங்கேற்க மருத்துவர்கள் ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்