மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளை புறக்கணிக்க போகிறேன்: மே.வங்க கவர்னர்

கொல்கத்தா,

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் டாக்டர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இது குறித்து மேற்கு வங்க கவர்னர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;- முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இனி பங்கேற்க மாட்டேன். மாநிலத்தில் கிராமங்கள், நகரங்கள் என எங்கு திரும்பினாலும் கலவரமாகவே இருக்கிறது. அரசியலமைப்பு விதிகளை நிலைகுலையச் செய்ததற்காக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். கவர்னராக அரசியலமைப்பில் உள்ள அம்சங்களை பாதுகாப்பது எனது கடமையாகும்" என்று கூறியுள்ளார்.

Related posts

15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 64 வயது முதியவர் போக்சோவில் கைது

மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்