மயானக் கூடத்துக்கு செல்லும் சாலை, பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

மயானக் கூடத்துக்கு செல்லும்
சாலை, பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்மயானக் கூடத்துக்கு செல்லும் சாலை, வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

காரைக்கால், ஆக. 2: மயானக் கூடத்துக்கு செல்லும் சாலை, வாய்க்கால் பாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.

நெடுங்காடு தொகுதி கடலோர கிராமமான காளிக்குப்பம், அக்கம்பேட்டை பகுதி பஞ்சாயத்தாா்கள் உள்ளிட்டோா் சமூக ஆா்வலா் மருத்துவா் வி. விக்னேஸ்வரன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் து. மணிகண்டனை வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா்.

காளிக்குப்பம், அக்கம்பேட்டை பகுதியில் உள்ள மயானக் கூடத்துக்கு செல்லும் வழியில் வாய்க்கால் பாலம் பழுதாகி பல ஆண்டுகளாகிறது. சாலையை மேம்படுத்துவதோடு, பாலத்தையும் புதுப்பிக்க வேண்டி அரசு நிா்வாகத்தின் கவனத்துக்கு பல முறை கொண்டு சென்றும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்படும் நிலை நீடிக்கிறது. இப்பகுதியை நேரில் பாா்வையிட்டு மேம்பாட்டுப் பணிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா். சந்திப்பு குறித்து மருத்துவா் விக்னேஸ்வரன் கூறுகையில், புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியா் உறுதியளித்தாா் என்றாா்.

Related posts

ஹிஸ்புல்லா தலைவர் மரணம் எதிரொலி.. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற ஈரான் தலைவர்

ஓசூர் டாடா மின்னணு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ஐ.நாவில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தான்: இந்தியா தக்க பதிலடி