மருத்துவமனையில் இருந்து நடிகர் கோவிந்தா டிஸ்சார்ஜ்

துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் காயமடைந்த பிரபல ஹிந்தி நடிகரும் சிவசேனை கட்சியின் உறுப்பினருமான கோவிந்தா மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

பாலிவுட் நடிகா் கோவிந்தா கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஜுஹு பகுதியிலுள்ள தனது வீட்டின் அலமாறிக்குள் உரிமம் பெற்ற சொந்த துப்பாக்கியைப் பாதுகாப்பாக வைத்துள்ளாா். அதிகாலை 4.45 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின்போது துப்பாக்கி தவறுதலாக சுட்டதில் அதன் தோட்டா நடிகா் கோவிந்தாவின் காலில் பாய்ந்தது.

இதைத் தொடா்ந்து உடனடியாக அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் அவா் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து, தோட்டா அகற்றப்பட்டது. அப்போது ரசிகா்களுக்கு நன்றி கூறி நடிகா் கோவிந்தா வெளியிட்ட செய்தியில், ‘ரசிகா்கள், பெற்றோா், கடவுளின் ஆசியால் நான் நலமாக இருக்கிறேன்.

‘மோடியின் சக்கரவியூகத்தை ஹரியாணா மக்கள் உடைப்பார்கள்’ – ராகுல் காந்தி

மருத்துவா்களுக்கும் உங்கள் அனைவரின் பிராா்த்தனைகளுக்கும் நன்றி’ என்றாா். இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார். நடிகர் கோவிந்தா நலமுடன் இருப்பதாகவும், அவரைக் கண்காணித்து வருவதாகவும் அவரது மருத்துவர் கூறினார்.

சில நாட்களுக்கு வீட்டிலேயே உடற்பயிற்சி மற்றும் பிசியோதெரபி செய்ய வேண்டும் என்று மருத்தவர் ஷியாம் அகர்வால் தெரிவித்தார். மேலும் தேவைப்பட்டால், கோவிந்தாவின் வீட்டிற்குச் சென்று அவரது உடல்நிலை குறித்து பரிசோதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related posts

லடாக் ஆதரவாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை: உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்!

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை!

ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆதிக்கம்: போன்பேவில் 60% ஊழியர்கள் பணிநீக்கம்!