நீதி கிடைக்க திரண்டிக்கும் மருத்துவர்களின் உணர்வோடு தானும் இருப்பதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
சென்னை,
மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு நீதி கோரி, நாடுமுழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், நீதி கிடைக்க திரண்டிக்கும் மருத்துவர்களின் உணர்வோடு தானும் இருப்பதாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், தமிழக பா.ஜனதா முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் நேற்றைய பதிவில், 'பெண் மருத்துவர்களை சிதைப்பது தாயை சிதைப்பதற்கு சமம். தாய் உயிர் கொடுக்கிறார்.
மருத்துவர் உயிர் காக்கிறார். சிதைக்கும் மிருகங்களே இதை சிந்தித்துப் பாருங்கள். கொல்கத்தாவில் சிதைக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கிடைக்க திரண்டிருக்கும் மருத்துவர்களின் உணர்வோடு நானும் உடனிருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.