மருத்துவர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

மருத்துவர் சுப்பையாவின் பணியிடை நீக்கத்துக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் துறை தலைவராக பணிபுரிந்த மருத்துவர் சுப்பையாவுக்கு எதிராக பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் மருத்துவர் சுப்பையா காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதை எதிர்த்து மருத்துவர் சுப்பையா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில்ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், மருத்துவர்சுப்பையாவுக்கு எதிராக இதுபோலபல புகார்கள் தொடர்ச்சியாக வருவதாக தெரிவித்தார். அதையடுத்து மருத்துவர் சுப்பையா தாக்கல் செய்திருந்த மனுவை தனி நீதிபதி ஜி.கே.இளந்திரையன், தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவர் சுப்பையா மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்புதலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜிஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு 4 வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்