மருத்துவ வரலாற்றில் சென்னை மருத்துவர்கள் சாதனை!

அமியான்டின் குடலிறக்கத்துடன் பிறந்த 23 நாள் குழந்தைக்கு சென்னை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

உலகின் மருத்துவ வரலாற்றில், இதுவரையில் 3 குழந்தைகள் மட்டுமே அமியான்டின் குடலிறக்கத்துடன் பிறந்துள்ளனர். தற்போது, 4 ஆவது குழந்தையாக, சென்னையில் வெறும் 28 வாரங்களில் பிறந்த, 23 நாள்கள் மட்டுமேயான ஆண்குழந்தை அமியான்டின் குடலிறக்கத்துடன் பிறந்துள்ளது.

இருப்பினும், எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனைகளின் மருத்துவர்களின் சிகிச்சையின்கீழ், பொது மயக்க மருந்து அளிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மற்ற முன்கூட்டியே பிறந்த குழந்தைகளைப் போலவே, இந்த குழந்தைக்கும் முதிர்ச்சியடையாத காற்றுப்பாதை இருந்ததால், மயக்க மருந்து அளிப்பதில் சிக்கல் இருந்தது. மேலும், மென்மையான திசுக்களில் சேதம் ஏற்படாமல் தவிர்க்க, கவனமான அறுவை சிகிச்சை கையாளுதல் தேவைப்பட்டதால், துல்லியமான மேலாண்மையுடன், இது ஒரு சவாலான அறுவை சிகிச்சையாக இருந்தது.

ராகுல் ராசியில்லாதவர்: பாஜக

அறுவை சிகிச்சைக்குப் பிறகு, குழந்தை நன்றாக குணமடைந்தது; மேலும், எடை அதிகரித்து 2.06 கிலோவை எட்டியது. தற்போது, பொதுப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இடுப்பு ஆய்வு, இடுப்பு பகுதியை ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக நடத்தப்பட்டது; குடல் நீக்குவதற்காக குடல் நீக்க அறுவை சிகிச்சை; குடலிறக்க அறுவை சிகிச்சை என 3 அறுவை சிகிச்சைகளுடன், முழு செயல்முறை ஒரு மணி நேரம்வரையில் நீடித்தது.

எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனைகளின் தலைவர் டாக்டர் பி. சத்யநாராயணன் கூறுகையில், “உலகளவில் மூன்று குழந்தைகளுக்கு மட்டுமே காணப்பட்ட அமியான்டின் குடலிறக்கத்துடன், நான்காவது குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட தீவிரமான சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது, எங்கள் குழுவின் நிபுணத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சை ஒரு பெரிய சவாலாக இருந்தது, ஆனால் எங்கள் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள், மயக்க மருந்து குழு மற்றும் என்.ஐ.சி.யூ. நிபுணர்கள், நம்பமுடியாத கவனிப்புடன் கையாண்டனர். எங்கள் மருத்துவமனையின் திறனைக் காட்டும் வகையில் இந்த சிகிச்சை அமைந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், டாக்டர் சரவணா பாலாஜி, "புதிதாகப் பிறந்த குழந்தை பிறப்பிலிருந்தே நியோனடல் ஐ.சி.யு. பிரிவில் இருந்தது. 23 ஆவது நாளில் குழந்தைக்கு வலது அங்குவினோஸ்கிரோடல் வீக்கம் ஏற்பட்டது.

நிலைமை குழந்தையின் உயிருக்கே ஆபத்தானதாக இருந்ததால், நாங்கள் அவசர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. முன்கூட்டிய குழந்தைகளில் பிறந்த குழந்தை குடலிறக்கங்கள் ஒப்பீட்டளவில் பொதுவானவை என்றாலும், அமியான்டின் குடலிறக்கம் விதிவிலக்காக அரிதானது.

இது இந்த குழந்தைகளில் 0.42 சதவிகிதத்தை மட்டுமே பாதிக்கிறது. துளையிடப்பட்ட குடல்கூட அரிதானது; இது அமியான்டின் குடலிறக்க வழக்குகளில் 0.1 சதவிகிதத்தில் மட்டுமே நிகழ்கிறது’’ என்று கூறியுள்ளார்.

மன அழுத்தம், விந்தணுவுக்கு நல்லது! – ஆய்வில் தகவல்

Related posts

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு

மகனை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை… குடும்பத் தகராறில் விபரீதம்

மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி – தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி