மருந்து சீட்டுகளில் மருத்துவர்கள் கன்னடத்தில் எழுத வேண்டும்

மருந்துச் சீட்டுகளில் மருத்துவர்கள் கன்னடத்தில் எழுத வேண்டும் – கர்நாடகாவில் வலுக்கும் கோரிக்கை!

கர்நாடகா

கர்நாடகத்தில் மருத்துவர்கள் மருந்துச் சீட்டுகளில் கன்னடத்தில் எழுத சுகாதாரத்துறை உத்தரவிடவேண்டும் என்று, கன்னட வளர்ச்சிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.

கர்நாடகத்தில் ஏற்கனவே விளம்பரப்பலகைகள், வணிக வளாக பெயர்ப் பலகைகள் கன்னடத்தில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இந்நிலையில் கன்னட வளர்ச்சிக் கழகம் அண்மையில் ஒரு அறிவுறுத்தலை மாநில சுகாதாரத்துறைக்கு கடிதமாக எழுதியுள்ளது.

அதில் கன்னடத்தை பெருமைப்படுத்தும் வகையிலும், கிராமபுற மக்கள் எளிதில் புரிந்துகொள்ளவும் மருந்துச்சீட்டுகள் கன்னடத்தில் எழுதப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த நடைமுறையை முதலில் அமல்படுத்த ஆணையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

விளம்பரம்இதையும் படிங்க: “கல்வித்தரத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது” – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாராட்டு!

அரசு மருத்துவமனை மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் கன்னடத்தில் எழுத முன்வரவேண்டும் என்றும் கன்னட வளர்ச்சிக் கழக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Facebook
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Karnataka
,
Latest News

Related posts

மின்சார வாரியத்தில் வேலை வழங்கக்கோரி ஐடிஐ படித்த இளைஞர்கள் உண்ணாவிரதம்

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

“உதயநிதிக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவியை ஸ்டாலின் வழங்குவார்” – அமைச்சர் செஞ்சி மஸ்தான்