மலைப் பகுதியில் மனைகளை வரன்முறை செய்ய நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்

மலைப் பகுதியில் மனைகளை வரன்முறை செய்ய நவ.30 வரை விண்ணப்பிக்கலாம்திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப் பிரிவுகள், மனைகள் ஆகியவற்றை வரன்முறை செய்து கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப் பிரிவுகள், மனைகள் ஆகியவற்றை வரன்முறை செய்து கொள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மொ.நா. பூங்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மலையிடப் பகுதியில் 20.10.2016-க்கு முன்னா் பகுதியாகவோ, முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமைந்துள்ள மனைகளை வரன்முறை செய்வதற்கு வீட்டு வசதி, நகா்ப்புற வளா்ச்சித் துறை அனுமதி அளித்திருக்கிறது.

இதன்படி, மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 30.11.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இதுவரை மலையிடப் பகுதியில் வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை வரன்முறை செய்து கொள்ள இது இறுதி வாய்ப்பு என்பதால், பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Related posts

நடிகர் தர்ஷனின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணை

அதிகமான பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் – ராகுல் காந்தி அழைப்பு

எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்த பாஜக திட்டம்-உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு