மலையாள சினிமாவை திட்டமிட்டு அழிக்கின்றனர்: சுரேஷ் கோபி

ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபி கருத்து தெரிவித்துள்ளார்.

கேரளத் திரைத்துறையில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கையால், யாரெல்லாம் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகளை அளித்தது? என அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே, துணை நடிகைகளான ரேவதி சம்பத், ஸ்ரீலேகா, மினு முனீர் உள்ளிட்டோர் நடிகர்கள் சித்திக், ரியாஸ் கான், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் நடிகருமான முகேஷ், ஜெயசூா்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடவேலா பாபு மற்றும் இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், நடிகர் சித்திக்கின் மேல் வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை ரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்கத் (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் ராஜிநாமா செய்தனர்.

மல்லுவுட் பாலியல் குற்றச்சாட்டுகள்: பட்டியலில் தமிழ் நடிகர்கள்?

இந்த நிலையில், நடிகரும் மத்திய இணையமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இப்பிரச்னைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “ ஹேமா கமிஷன் மூலம் ஊடகங்களுக்கு தீனி கிடைத்துள்ளது. நடிகைகள் அளித்த பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரங்கள் உள்ளன? யார் குற்றவாளிகள் என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர ஊடகங்கள் அல்ல. நீங்கள் (ஊடகங்கள்) யுத்தத்தை உருவாக்கி ரத்தத்தைக் குடிக்கிறீர்கள். இதைக் கையிலெடுத்து பலரும் சம்பாதிக்கின்றனர். திட்டமிட்டு மலையாள சினிமாவை அழிக்க முயற்சிக்கின்றனர்.” என ஆவேசமாக தன் கருத்துகளைக் கூறியுள்ளார்.

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

Actor Rajinikanth, 73, has been admitted to Apollo Hospitals

National Testing Agency Set To Announce Results For UGC NET June 2024; Steps To View