மலை படத்தின் ‘கண்ணசர ஆராரோ’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல்

யோகி பாபு நடிக்கும் 'மலை' திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

சென்னை,

நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர், 'மண்டேலா' படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் 'போட்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கிடையில், 2022-ம் ஆண்டு யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் ஆகியோர் இணைந்து ஒரு கிராமப்புற படத்தில் நடித்துள்ளனர். லெமன் லீப் கிரியேசன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு 'மலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட், சிங்கம்புலி, ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் லட்சுமி மேனன் மருத்துவராக நடித்துள்ளார். யோகி பாபு வேட்டைக்காரனாகவும், நடிகர் காளி வெங்கட் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தினை அறிமுக இயக்குனர் ஐபி முருகேஷ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் வருகிற செப்டம்பர் மாதம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், இசையமைப்பாளர் டி இமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 'கண்ணசர ஆராரோ' என்ற பாடலை தயாரிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த பாடலை பாடகி ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். மேலும் இந்த பாடலுக்கு யுகபாரதி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

Every song that I have ever recorded with Shreya Ghoshal has turned out magical. People have always asked me what is the magic going behind. So, here's a glimpse of the making of #KannasaraAararo with Shreya Ghoshal from movie Malai!Sung By : @shreyaghoshal Lyrics by:… pic.twitter.com/roz22NZRef

— D.IMMAN (@immancomposer) August 29, 2024

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!