மல்லிகார்ஜுன கார்கேவின் அரியானா தேர்தல் பிரசாரம் ரத்து

சண்டிகார்,

90 உறுப்பினர்களைக் கொண்டஅரியானா சட்டசபைக்கு அக்டோபர் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. அதேபோல காங்கிரசுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையே கூட்டணி ஏற்படாததால், இரண்டும் தனித்தனியே களம் காண்கின்றன. மறுபுறம் ஜனநாயக ஜனதா கட்சியும், ஆசாத் சமாஜ் கட்சியும் கூட்டணியாக இணைந்து களம் காண்கின்றன. எனவே இங்கு நான்கு முனை போட்டி நிலவுகிறது. அரியானா தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சி தலைவர்கள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரியானா மாநிலத்தின் அம்பாலா நகரிலும், கர்னால் மாவட்டத்தின் கராண்டாவிலும் இரண்டு தேர்தல் பேரணிகளில் இன்று காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்று உரையாற்றவிருந்தார். இந்நிலையில், அவர் உடல்நிலைக் கருதி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த பேரணியில் கார்கே பங்கேற்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

2016 ஜூன் 15 கொல்லம் கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

US To Test Hypersonic Nuclear Missile After Polls Close: Report

2024 Maruti Suzuki Dzire Officially Revealed, Launch On November 11