மழைத் தண்ணீரில் மிதக்கும் முதல்வர் தொகுதியான கொளத்தூர்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் மழை நீரில் மிதக்கிறது.

பருவமழை காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், பெரவள்ளூர் கே 5 காவல் நிலையம் மழை நீரில் மூழ்கியுள்ளது.

மழை நிலவரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சென்னை பெரம்பூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். மேலும், சென்ட்ரல் அருகே உள்ள யானைக் கவுனி,புளியந்தோப்பு பட்டாளம், ஆகிய இரண்டு இடங்களிலும் ஆய்வில் ஈடுபட்டார்.

முதல்வரின் சொந்தத் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில், அதிகப்படியான மழைநீர் சூழ்ந்து இருந்த காரணத்தால் முதல்வர், தொகுதிக்கு உள்ளே செல்லமுடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சென்னையில் மேலும் 3 மணி நேரம் கனமழை! நாளை அதி கனமழை பெய்யும்!!

மேலும், ஜவஹர் நகர், ஜிகேஎம் காலனி 1-வது தெரு முதல் 30 வது தெரு வரையும், பெரியார் நகர், கார்த்திகேயன் சாலை, ஜவஹர் நகர் 1வது தெரு முதல் 10 வது தெரு வரையிலும் மற்றும் சோமசுந்தரம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், அப்பகுதி தீவு போல் காட்சியளிக்கிறது.

மீட்புப் பணி குறித்து கொளத்தூர் மாவட்ட துணை ஆணையர் பாண்டியராஜன் தலைமையில் பொதுமக்களுக்கு உதவிட போலீஸாருக்கு மூன்று படகுகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக போலீஸார் அங்கங்கே தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது