மழையால் குளிர்ந்த தில்லி!

மழையால் குளிர்ந்த தில்லி!திடீர் மழையால் தில்லியில் வெப்பநிலை குறைந்தது!கோப்புப் படம்

நீண்ட வெப்ப அலைகளுக்குப் பிறகு, தேசியத் தலைநகா் தில்லியில் இன்று பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வட இந்தியாவில் குறிப்பாக பல பகுதிகள் நீண்ட வெப்ப அலையின் பிடியில் உள்ளதால், உயிரிழப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெப்பத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்புப் பிரிவுகளை அமைக்க மருத்துவமனைகளுக்கு அறிவுரை வழங்குமாறு மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

இன்று அதிகபட்ச வெப்பநிலையாக 39.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ள நிலையில் மாலை வேளையில் லேசான மழை பெய்தது. அதே வேளையில் நாளை, நாளை மறுநாள் (ஜூன் 24, 25) ஆகிய தேதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5.30 மணி வரை காற்றில் ஈரப்பதம் 63 சதவிகிதமாக இருந்த நிலையில், தேசிய தலைநகரின் காற்றின் தரக் குறியீடு மாலை 6 மணியளவில் 143 புள்ளிகளுக்ளுடன் மிதமான பிரிவில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

Value of gold bar hits $1 million for the first time ever

Excise Policy case: Delhi HC dismisses Arvind Kejriwal’s plea challenging his arrest by CBI

வயநாடு மக்களுக்கு ராகுல் உருக்கமான கடிதம்!