மழையால் கைவிடப்பட்ட 2-ஆம் நாள் ஆட்டம்!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (செப்டம்பர் 27) கான்பூரில் தொடங்கியது. போட்டியின் முதல் நாளான நேற்று மழை காரணமாக போட்டி நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இடையிடையே மழை குறுக்கிட்டதால், ஓவர்கள் முழுவதும் வீசப்படவில்லை.

சாலை விபத்தில் சிக்கிய இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!

நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் எடுத்திருந்தது. மோமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்ஃபிகர் ரஹிம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

2-ஆம் நாள் ஆட்டம் ரத்து

போட்டியின் இரண்டாம் நாளான இன்று (செப்டம்பர் 28) காலை முதலே கனமழை பெய்ததால், போட்டி தொடங்குவது தாமதமானது. மழை நின்ற பிறகு, பணியாளர்கள் மைதானத்திலிருந்து நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், போட்டியை நடத்துவதற்கு ஏதுவான சூழல் இல்லாததால், இரண்டாம் நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.

Update from Kanpur
Play has been called off for Day 2 due to rains.#TeamIndia | #INDvBAN | @IDFCFIRSTBankpic.twitter.com/HD98D6LK9K

— BCCI (@BCCI) September 28, 2024

டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்!

இரு அணிகளுக்கும் இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

Ronit Roy Refuses To Work With Vashu Bhagnani After ‘Painful’ Experience On BMCM, Claims Payment Was ‘Very Delayed’

IIT Delhi Introduces ‘Research Communications Award’ To Boost PhD Scholars’ Communication Skills; Winners Get Rs. 25000

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு காத்திருக்கும் சவால்கள்!