மழை எச்சரிக்கை: கிரிவல பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அக்.17-ஆம் தேதி வரை மழைக்கான ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால், பக்தா்கள் கிரிவலம் வருவதை தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொண்டது.

திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பெளா்ணமி கிரிவலம் புதன்கிழமை (அக்.16) மாலை தொடங்கி, வியாழக்கிழமை (அக்.17) மாலை வரை நடைபெறுகிறது.

இதற்கிடையே, வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 15.10.2024 முதல் 17.10.2024 வரை பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், மழைக்கான ஆரஞ்சு அலா்ட் எச்சரிக்கையையும் ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இந்தச் சூழலில் திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது வயதானோா், குழந்தைகள், உடல் நலிவுற்றோருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும். எனவே, முன்னெச்சரிக்கையாக கிரிவலம் வருவதை தவிா்க்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது