மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை: உதயநிதி பதில்

சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக ஆட்சியில் சென்னையில் வெள்ளம் தேங்காமல் இருக்க நிரந்தரத் தீா்வு காணும் பொருட்டு 2021-இல் அமைக்கப்பட்ட திருப்புகழ் கமிட்டி அறிக்கை பரிந்துரைத்த திட்டங்களில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன, எவ்வளவு மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன, எத்தனை சதவீதப் பணிகள் முடிவடைந்துள்ளன என்பதையெல்லாம் திமுக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், சென்னையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் மேற்கொண்டதைப் பற்றி முழுமையாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மக்களை ஏமாற்றும் நாடகங்களை நடத்துவதைக் கைவிட்டு, போா்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.

இதற்கு, சென்னையில் மழை நீர் தேங்காமல் இருப்பது தான் வெள்ளை அறிக்கை. வரும் நாட்களில் கனமழை பெய்தாலும் தமிழக அரசு அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளது என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

சென்னை திருவல்லிகேணி பகுதியில் உள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சட்டப்பேரவை தொகுதியான சேப்பாக்கம் – திருவல்லிகேணி அலுவலகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை காலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு போர்வை, பிரட், பிஸ்கட் உள்ளிட்ட நிவாரண பொருட்களை புதன்கிழமை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

இதையும் படிக்க |சென்னையில் வெள்ளநீர் வடியக் காரணம்? – மு.க. ஸ்டாலின் பேட்டி

சேப்பாக்கம் – திருவல்லிகேணி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சாலை பணியாளர்களுக்கு இந்த நிவாரண பொருட்களையும் ஊக்க தொகையாக ஆயிரம் ரூபாயையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். உடன் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அனைத்து அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் களத்தில் இருந்து பருவ மழையை எதிர்கொண்டோம். வரும் நாட்களில் கனமழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது.

தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், மெட்ரோ வாட்டர் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

பின்னர் மழைநீர் தடுப்பு பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு சென்னையில் மழை நீர் தேங்காாமல் நிற்கிறது இதுவே வெள்ளை அறிக்கை தான் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.

Related posts

Aurangabad: CSMC Warns Shopkeepers to Clear Encroachments Ahead of Diwali Festival as City Markets Crowd Up

Nitin Gadkari To Chair Inaugural Session Of PWD’s Two-Day Seminar On Emerging Trends In Road & Bridge Construction In Bhopal

Marathwada News: 27.71L Voters to Vote in 9 Constituencies in Nanded; 5 Persons, 3 Vehicles Permitted for Filing Nomination Forms; VBA Declares 5 Candidates in Nanded