மழை புகார்: சென்னை மாநகராட்சியின் உதவி எண்கள்!

சென்னை மாநகரில் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்க உதவி எண்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மழை தொடர்பான புகார், மீட்புப் பணிகளுக்கு 1913 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறையை 044 – 2561 9204, 2561 9206, 2561 9207 ஆகிய எண்களையும் தொடர்பு கொள்ளலாம். வாட்ஸ் ஆப் எண் – 9445551913. இந்த எண்ணிலும் புகைப்படம், விடியோக்களை அனுப்பி புகார்களைத் தெரிவிக்கலாம்.

இதேபோன்று Chennaicorporation.gov.in இணையதளம், நம்ம சென்னை செயலி வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைப் பதிவிடலாம்.

மேலும், சென்னை மாநகராட்சியின் சமூகவலைதள பக்கங்கள் வாயிலாகவும் மழை தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம்.

இதையும் படிக்க | மழைக்கு சவால்! வேளச்சேரி பாலத்தில் காரை நிறுத்தத் தொடங்கிய மக்கள்!

கனமழை எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று வடதமிழக கடலோர பகுதியை நோக்கி அடுத்த 48 மணிநேரத்தில் நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக். 15) மிக கனமழையும், நாளை மறுநாள் (அக். 16) அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வடகிழக்குப் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளது. இதனையொட்டி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

வெள்ள பாதிப்புகள் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிந்து மாவட்ட வாரியாக விவரங்களை வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க | கனமழை: வேளச்சேரிக்கு படகுகள் அனுப்பிவைப்பு!

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது