‘மாடர்ன் மாஸ்டர்ஸ் : எஸ்.எஸ்.ராஜமவுலி ‘ ஆவணப்பட டிரெய்லர் வெளியீடு

‘மாடர்ன் மாஸ்டர்ஸ் : எஸ்.எஸ்.ராஜமவுலி ’ ஆவணப்படத்தின் டிரெய்லரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தெலுங்கில் மட்டுமல்லாது இந்தியளவில் பிரம்மாண்ட இயக்குனர்களுக்கான பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. 2001-ம் ஆண்டு ஸ்டூடண்ட் நம்பர்-1 என்ற படத்தின் மூலம் இயக்குனராக தன் திரை வாழ்வை ஆரம்பித்த ராஜமவுலி தொடர்ந்து சிம்ஹத்ரி, சை, சத்ரபதி உள்ளிட்ட படங்களை இயக்கி கமர்சியல் இயக்குனராக வெற்றி பெற்றார். இவையனைத்தும் எஸ்.எஸ்.ராஜமவுலியை சாதாரண இயக்குனராகவே அடையாளப்படுத்தியது. ஆனால், 2012-ம் ஆண்டு இவர் இயக்கிய 'நான் ஈ' திரைப்படம் கதை ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் நாடு முழுவதும் பேசப்பட்டது. தமிழிலும் அப்படம் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இதன் பின் 2015-ம் ஆண்டு இந்தியாவே திரும்பிப்பார்த்த பாகுபலி திரைப்படத்துடன் வந்தார். உலகளவிலும் இந்தியாவிலிருந்து இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா என வியக்கும் அளவுக்கு அதன் கதாபாத்திர வடிவமைப்புகளும் வி.எப்.எக்ஸ் காட்சிகளும் பேசப்பட்டன. இதன் இரண்டாம் பாகமான பாகுபலி – 2 வெளியாகி உலகளவில் ரூ.1850 கோடியை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இறுதியாக, ஆர்.ஆர்.ஆர் திரைப்படமும் ரூ.1350 கோடி வரை வசூலித்து ராஜமவுலியை இந்தியத் திரை வரலாற்றில் முக்கியமான ஆளுமையாகக் காட்டியது.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்கிய பெயரில் அவர் குறித்த ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளனர். இதனை, ராகவ் கண்ணா இயக்கியுள்ளார். மேலும், இந்த ஆவணப்படம் ராஜமவுலியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில் தற்போது, 'மார்டன் மாஸ்டர்ஸ்' ஆவணப்படத்தின் டிரெய்லரை இன்று நெட்பிளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணப்படத்தில் ராஜமவுலியின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்தும், திரைத்துறை வாழ்க்கை குறித்தும் பேச இருக்கிறது. பிரபல இயக்குனர்களான ஜேம்ஸ் காமரூன், ஜோ ரஸ்ஸோ மற்றும் கரன் ஜோஹர் இவரைப் பற்றி பேசியுள்ளனர்.

A master of his craft, a cinema phenomenon. Watch director S. S. Rajamouli's journey from Student No. 1 to RRR Modern Masters: S.S. Rajamouli, coming on 2 August, only on Netflix!#ModernMastersOnNetflixpic.twitter.com/VRmvVJwDiN

— Netflix India (@NetflixIndia) July 22, 2024

திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், "இயக்குனர் ராஜமவுலியால் எதை வேண்டுமானாலும், யாருடன் வேண்டுமானாலும் இணைந்து செய்ய முடியும்". என புகழ்ந்து பேசியுள்ளார்.

View this post on Instagram

A post shared by Netflix India (@netflix_in)

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!