மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்தது! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்தது! மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்துள்ளதால், சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும் பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநிலங்களவை (கோப்புப்படம்)

மாநிலங்களவையில் பாஜகவின் பலம் குறைந்துள்ளதால், சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஆளும் பாஜக அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பாஜகவின் நியமன எம்பிக்கள் 4 பேர் சனிக்கிழமை ஓய்வு பெற்றதையடுத்து, பாஜக மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 86 ஆக குறைந்துள்ளது.

245 எம்பிக்கள் உள்ள மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் நிலையில், தேசிய ஜனநாயாகக் கூட்டணி (என்டிஏ) எம்பிக்களின் எண்ணிக்கை 101 ஆக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 7 அணிசேரா நியமன எம்.பி.க்கள், 2 சுயேச்சைகள், கூட்டணிக் கட்சி ஆதரவுடன் என்டிஏ கூட்டணி சட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடியும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு மாநிலங்களவையில் 87 எம்பிக்கள் உள்ள நிலையில், காங்கிரஸுக்கு 26, மேற்கு வங்க திரிணமூல் காங்கிரஸுக்கு 13, ஆம் ஆத்மி மற்றும் திமுகவிற்கு தலா 10 எம்பிக்கள் உள்ளனர்.

இவர்களைத் தவிர பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இணையாத தெலங்கானா சந்திரசேகர ராவ்வின் பாரதீய ராஷ்டிரிய சமிதி, அதிமுக, சுயேச்சைகள் எம்பிக்களாக உள்ளனர்.

ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனல் மான்சிங் மற்றும் மஹேஷ் ஜெத்மலானி ஆகிய நான்கு நியமன எம்பிக்கள் சனிக்கிழமை ஓய்வு பெற்றனர்.

தற்போது, மாநிலங்களவையில் 19 உறுப்பினர்களின் பதவி காலியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

காங்கிரஸ் மற்றும் சாதி கட்சிகளிடம் இருந்து தலித் தலைவர்கள் விலகி இருக்க வேண்டும் – மாயாவதி

இந்தியாவில் முதல்முறை; கேரளாவில் ஒருவருக்கு 1-பி வகை குரங்கம்மை பாதிப்பு

திருப்பதி லட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ்