மாநிலங்களவையில் மோடி உரைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு!

மாநிலங்களவையில் மோடி உரைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் அமளி, வெளிநடப்பு!மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்கவில்லை என அமளி.எதிர்க்கட்சிகள் அமளி

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் இன்று உரையாற்றினார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பேச அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

அமளிக்கு மத்தியில் பிரதமர் மோடி பேசிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்.. எதிர்க்கட்சித் தலைவர் என்றும், பொய் சொல்வதை நிறுத்துங்கள் என்றும் எதிர்க்கட்சிகள் முழக்கமிடத் தொடங்கினர்.

இதனைத் தொடர்ந்து, மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Related posts

திருப்பதி லட்டு விவகாரம்; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்ய முடிவு

சந்திரபாபு நாயுடு கடவுளிடமே அரசியல் செய்கிறார் – ரோஜா

‘கோவில்களின் நிர்வாகம் பக்தியுள்ள இந்துக்களிடம் இருக்க வேண்டும்’ – சத்குரு ஜக்கி வாசுதேவ்