மாநிலங்களை எம்.பி. பதவி… அஜித் பவாரின் மனைவி வேட்புமனுத் தாக்கல்

மகாராஷ்டிராவில் காலியாகும் 2 மாநிலங்களவை இடங்கள்… அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா வேட்புமனுத் தாக்கல்!

அஜித் பவாருடன் சுனேத்ரா பவார்

மகாராஷ்டிராவில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் பாராமதி தொகுதியில் சுனேத்ரா பவார் போட்டியிட்டார். எனினும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சுப்ரியா சுலே-விடம் அவர் தோல்வியைத் தழுவினார். இதனால், அஜித் பவார் அதிருப்தி அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவைக்கு இரண்டு பேரை தேர்வுசெய்வதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட சுனேத்ரா பவார் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

விளம்பரம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம்பேசிய மாநில அமைச்சரும், மூத்த தலைவருமான சஜன் புஜ்பால், தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருந்தபோதிலும், கட்சித் தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசியலை பொறுத்த அளவில் சரத்பவார் தலைமையில் ஒரு தேசியவாத காங்கிரஸ் கட்சியும், அவரது உறவினர் அஜித் பவர் தலைமையில் இன்னொரு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் செயல்பட்டு வருகிறது.

இதேபோன்று சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே என 2 தலைமைகளை கொண்ட 2 கட்சிகளாக செயல்படுகிறது. மக்களவைத் தேர்தலில் அஜித் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் காங்கிரஸ் கட்சியுடனும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.

விளம்பரம்இதையும் படிங்க – தண்ணீர் கேன்களுக்கு மட்டும் மாதம் இத்தனை ஆயிரங்களா… மக்களை வாட்டி வதைக்கும் தண்ணீர் பஞ்சம்

இதில் காங்கிரஸ் கட்சி 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதேபோன்று பாஜக 9 இடங்களிலும், சிவசேனா கட்சி (ஏக்நாத் ஷிண்டே) 7 இடங்களிலும் வெற்றி பெற்றது.

அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இந்த தேர்தலில் தனது உறவினரான சுப்ரியா சுலேவிடம் அதாவது சரத் பவாரின் மகளிடம், அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தோல்வியடைந்தார். இந்த சம்பவம் தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

விளம்பரம்

  • Whatsapp
  • Telegram
  • Twitter
  • Follow us onFollow us on google news

.Tags:
Rajya Sabha
,
Sharad Pawar

Related posts

ராணுவத்தில் அதிகாரிபணி: விண்ணப்பிக்க 28-ம் தேதி கடைசி நாள்

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க எந்த சக்தியாலும் முடியாது – பிரதமர் மோடி

கங்குவா படத்தை வெளியிட தடையில்லை: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு